பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.
பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுத்தரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி கதை சொல்வதே.
கதை, ஒரு மொழியின் கட்டமைப்பையும், அதன் வளத்தையும் உங்களுக்குச் சொல்லித் தரும்.